×

செல்லாது என கூறுவதால் நூதன விழிப்புணர்வு 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி ஆபர்: 500 பேருக்கு மட்டுமே கொடுத்ததால் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி: ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்படும் 10 ரூபாய் நாணயத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் செல்லாத என கூறி வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். புதுச்சேரியிலும் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கப்படுவதால் பிரியாணி சலுகை மூலம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது காணும் பொங்கல் தினம் நேற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் அருகிலுள்ள ஒரு ஓட்டல் 10 ரூபாய் நாணயத்துக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தது. இதனால், நேற்று மதியம் 12 மணியளவில் ஓட்டல் முன்பு சுமார் 1 கி.மீ தூரத்துக்கு பொதுமக்கள் முண்டியடித்து திரண்டனர்.
ஒரு நபருக்கு ஒரு பிரியாணி என்ற ரீதியில் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி அரை மணி நேரத்தில் 500 பேருக்கு மட்டுமே பிரியாணி பொட்டலத்தை வழங்கி சலுகையை நிறைவு செய்தது. இதனால் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்த மற்றவர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்களில் சிலர் ஓட்டல் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரியாணி சலுகையால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

The post செல்லாது என கூறுவதால் நூதன விழிப்புணர்வு 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி ஆபர்: 500 பேருக்கு மட்டுமே கொடுத்ததால் மக்கள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Nudana ,Puducherry ,Reserve Bank ,Chennai ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...