×

இபிஎஸ் தான் எங்கள் பொதுச்செயலாளர், அவர் பின்னால் நிற்போம்: எடப்பாடி தரப்புக்கு மாறிய கே.சி.வீரமணி

 

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் அதிமுக மாவட்ட கழக செயலாளராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அதிமுக 2 ஆக பிளவுப்பட்டுள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்து செயல்பட்டார். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தை அடுத்து கே.சி.வீரமணி மா.செ. பதவியை எடப்பாடி பறித்திருந்தார். இதனிடையே திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக பசுபதி என்பவர் நியமிக்கப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த மாவட்ட செயலாளருக்கு கே.சி.வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய மாவட்டச் செயலாளருக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே பயணிப்போம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 

Tags : EPS ,K. ,C. Veeramani ,Chennai ,S. B. K. ,Velumani ,C. Veeramani Edappadi ,Palanisamy ,K.K. ,Tirupathur Adimuka District Corporation ,
× RELATED அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட்...