×

சேலம் மாவட்டத்தில் 3 நாட்களில் 14 டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம், மே 15:  தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள 717 மதுபான சில்லரை விற்பனைக் கடைகளை அடுத்த 2 வாரத்துக்குள் மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 12ம் தேதி சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், ஆத்தூர் ரயிலடி தெரு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் மூடினர். 13ம் தேதி புதிய பஸ் ஸ்டாண்ட், ஓமலூர் பஸ் ஸ்டாண்ட், கொளத்தூர், கொண்டலாம்பட்டி, பேளூரில் 7 கடைகள் மூடப்பட்டன. நேற்று (14ம் தேதி) சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள 3 கடைகள், வாழப்பாடி புதுப்பாளையத்தில் 2 கடைகள் என 5 கடைகளை அதிகாரிகள் மூடினர். சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாளில் 14 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
Tags : Salem district ,Salem ,Tamil Nadu ,
× RELATED தண்ணீர் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை