ராசிபுரத்தில் மறைக்கப்படாத தலைவர்கள் சிலை, சின்னம்

ராசிபுரம், மார்ச்2: தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதுமாக பொது மற்றும் தனியார் சுவர்களில் எழுதப்பட்ட அரசியல் கட்சி விளம்பரங்கள், கொடி கம்பங்கள் அகற்றுதல் மற்றும் தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் இரட்டை இலை சின்னம் மறைக்கப்படாமல் உள்ளது. எதிர்கட்சிகளிடம் கெடுபிடி காட்டும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், இதை கண்டும் காணாமல் உள்ளனர். மேலும், நகரில் பல இடங்களில் அதிமுகவின் சின்னங்களை நகராட்சி ஊழியர்கள் அழித்த போதிலும், அது தெளிவாக தெரிகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories:

>