ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த கால்இறுதி போட்டியில் 3ம் நிலை வீராங்கனையான 22 வயதான அமெரிக்காவின் கோகோ காப், 8வதுரேங்கில் உள்ள ரஷ்யாவின் 19 வயதான மிரா ஆண்ட்ரீவா மோதினர். இதில் 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காப் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில் 36 வயதான ருமேனியாவின் சோரானா சிர்ஸ்டியா, 6-1,7(7)-6(0) என்ற செட் கணக்கில் 28 வயதான லாட்வியாவின் ஜெலெனா ஆஸ்டாபென்கோவை வென்றார். இன்று கால்இறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்- அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கஜகஸ்தானின் ரைபகினா- உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில், 30வயதான ரஷ்யாவின் மெட்வெடேவ் 6-3,6-2 என அர்ஜென்டினாவின் தியாகோ அகஸ்டின் டிரண்டேவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.
