×

சூர்யா, திரிஷா நடிக்கும் ‘கருப்பு’ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, சுவாசிகா, ஷிவதா நாயர், யோகி பாபு நடித்துள்ள படம், ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, சாய் அப்யங்கர் இசை அமைத்துள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படத்தின் முதல் 2 நாட்களுக்கு மட்டும் கூடுதல் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 14, 15) ஆகிய இரு நாட்களில் ஒரு காட்சியை கூடுதலாக திரையிடலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘கருப்பு’ படத்தின் சிறப்பு காட்சியை காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை, அதிகபட்சமாக 5 காட்சிகள் வரை திரையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Suriya ,Trisha ,Chennai ,RJ Balaji ,Swasika ,Shivatha Nair ,Yogi Babu ,S.R. Prabhu ,Dream Warrior Pictures ,Sai Abhyankar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து