×

தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு! வேதாரண்யத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறைபிடிப்பு…

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர். நாகை மாவட்டம், தென்னடார் ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆட்சியில், இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தென்னடார் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபை தேர்தல் வரையில் தொழிற்பேட்டை பணிகள் நிறுத்தப்பட்டன. தென்னடார் பகுதியில் உள்ள அரசு கட்டடங்களை அகற்ற மதிப்பீடு செய்யும் பணிக்காக நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தில் உள்ளே வைத்து நுழைவாயிலை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் தாசில்தார் ஜெயசீலன் கிராமத்தினரிடம் பேசி அதிகாரிகளை மீட்டனர்.

Tags : Vedaranya ,Nagapattinam ,Vedaranyam ,Shipkat Industrial Estate ,Nagai district, South Nadar ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து