×

பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்: பெரம்பலூரில் கலெக்டர் அறிவுறுத்தல்

பெரம்பலூர், மே 12: நாளை பிளஸ்-2 மாணவ, மாணவிகள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 எனப்படும் 12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி 26 ம் தேதி வரை நடைபெற்றது. 82 அனைத்து வகைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவியர் 36 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வுஎழுதிய 3,742 ஆண்கள், 3,464 பெண்கள் என மொத்தம் 7,206பேர்களில், 3,470 ஆண்கள், 3,342 பெண்கள் என மொத்தம் 6,812 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட அளவில் 94.53 சதவீதத் தேர்ச்சி பெறப் பட்டுள்ளது.

கடந்த 8ம் தேதி மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்-2) முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை 13-ம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து, அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப் பட்ட USER ID PASSWORD ஐக் கொண்டு, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து, அந்த சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து, தலைமை ஆசிரியர் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை இட்டு நாளை 13-ம் தேதியிலிருந்தே தங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம்.
மேலும் மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளீடு செய்து தாங்களே டவுன்லோட் செய்துகொள்ளலாம். தனித் தேர்வர்கள் Notification பகுதியில் சென்று, HSE II Year March-2026- Statement of Marks பக்கத்தில், தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விபரங்களை அளித்து, www.dge.tn.gov.என்ற இணைய தளத்தில் உரிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,Perambalur District Government Examinations ,Assistant Director ,Kalpanathan Rai ,Perambalur… ,
× RELATED மாரியம்மன் கோயில் திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்