×

அரியலூர் மாவட்டத்தில் 22ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழைப்பு

 

அரியலூர், மே 20: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார்துறை வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மே 22 (வெள்ளிக்கிழமை) அன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் 300க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர்.

Tags : Ariyalur district ,Ariyalur ,Collector ,Rathinasamy ,
× RELATED சிறுவளூர் கிராமத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப பயிற்சி