×

பாமக சட்டமன்ற தலைவராக சவுமியா தேர்வு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதன்மைச் செயலாளர் சீனிவாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அதில், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தர்மபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சவுமியா அன்புமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சட்டப் பேரவைக் கட்சியின் துணைத் தலைவராக செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ்குமார், கொறடாவாக விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Saumya ,Speaker ,Bamaka Assembly ,Chennai ,President ,Anbumani ,Sinivasan ,Principal Secretary ,Tamil Nadu Legislative Branch ,Palamaka Legislative Assembly ,2026 Tamil Nadu Legislative elections ,Dharmapuri ,Chairman of the Legislative Committee ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...