×

புதிய ஆட்சியில் சுகாதாரத்துறையை மேம்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும்: அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு கோரிக்கை

 

சென்னை: புதிய ஆட்சியில் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ள நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மிக முக்கிய துறையான மகப்பேறு துறையில் கூட மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகமாகவே இருந்தது.

எனவே தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்ததும் முதல் அறிவிப்பாக கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலைக்கான ஆணையை தமிழக முதல்வரின் கைகளால் வழங்க வேண்டுகிறோம். மேலும் மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டுமென்று 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கை வழங்க வேண்டும். புதிய ஆட்சியில் முதல் அறிவிப்பாக சுகாதாரத் துறையை மேம்படுத்தும் அறிவிப்பை வெளியிட அரசு மருத்துவர்கள் வேண்டுகோளாக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Government Doctors' Legal Campaign Committee ,Chennai ,Perumal Pillai ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து