சென்னை: 60 ஆண்டு திராவிட ஆட்சிக்குப் பின் தவெக அரசில் பிராமண சமூகத்தினருக்கு மீண்டும் அமைச்சரவை வாய்பபு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசியலில் பல தசாப்தங்களாக திராவிட கட்சிகளின் ஆட்சி நிலவிவரும் நிலையில், பிராமண சமூகத்தினர் அமைச்சரவையில் இடம்பெறுவது மிகவும் அரிதான நிகழ்வாகவே இருந்து வந்தது. அந்த நிலை இன்று மாறியிருக்கிறது. 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மயிலாப்பூர் எம்எல்ஏ பி. வெங்கடராமணன் அமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை பிராமண அமைச்சர்களாக வெறும் சிலரே இருந்துள்ளனர். அதில், ராஜகோபாலாசாரி (ராஜாஜி) முதலமைச்சர் (193740, 195254) அயங்கார் பிராமண சமூகத்தைச் சேர்ந்த ராஜாஜி, காங்கிரஸ் கட்சி சார்பில் இரு முறை மதராஸ் மாகாண முதலமைச்சராக பதவி வகித்தார். சுதந்திரப் போராட்ட தலைவரான இவர், பின்னர் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
ஜெயலலிதா முதலமைச்சர் அதிமுக தலைவரான ஜெயலலிதா, பிராமண வழியில் பிறந்தவர். தமிழ்நாட்டில் மிக நீண்ட காலம் (சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல்) முதலமைச்சராக பதவி வகித்தவர்களில் இரண்டாமிடத்தில் உள்ளார். தன் ஆட்சிக் காலத்தில் பிராமண சமூகத்தினருக்கு சில வாய்ப்புகள் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எச்.வி. ஹண்டே சுகாதாரத்துறை அமைச்சர் (19771986). இவர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இரண்டு முறை சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார். கோவையில் பிறந்து மங்களூரில் வேர்களைக் கொண்ட இவர், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது 98 வயதிலும் உயிருடன் இருக்கிறார்.
தற்போது அவர்களது வரிசையில் பிராமணர் வகுப்பை சேர்ந்த பி. வெங்கடராமணன் மயிலாப்பூர் தொகுதியில் இம்முறை முதல்முறையாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, விஜய் அமைச்சரவையில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.1967 முதல் திமுக தலைமையிலான அரசுகளில் (196777, 198991, 19962001, 200611, 202126) பிராமண சமூகத்தினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஒரு பிராமண வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த பிராமண சமூகத்திற்கு, தவெக அரசில் மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
