×

வங்கக் கடலோரத்தில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு: தமிழகத்தை நெருங்குவதால் மழை நீடிக்கும்

சென்னை: கடலோரத்தை ஒட்டி நிலை கொண்ட வளி மண்டல காற்று சுழற்சி மேலும் வலுவடையும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இது தவிர இரு காற்று இணையும் வாய்ப்பும் உள்ளதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள இரு வளி மண்டல காற்று சுழற்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றும் இன்று காலையும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 100 மிமீ மழை பெய்தது. செங்கல்பட்டு 38 மிமீ மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அனேக மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

தற்போது காற்று சுழற்சி தமிழ்நாடு இலங்கை இடைப்பட்ட மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜெலசந்தியில் நீடிக்கிறது. அரபிக் கடல் பகுதியில் மாலத்தீவு பகுதியில் ஒரு காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்த காற்று சுழற்சியும் இலங்கை அருகே உள்ள காற்று சுழற்சியும் இணைவும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. கிழக்குப் பகுதியில் இருந்து நீராவியை கொண்டு வரும் காற்று வீசும். அதேநேரத்தில் உயர் அழுத்த காற்று சுழற்சி ஏற்பட்டு வங்கக் கடலில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மாலத்தீவு காற்று சுழற்சியுடன் வங்கக் கடல் காற்று சுழற்சி இணைந்து மழை பெய்யும். இந்த மழை மதியத்துக்கு பிறகு தென் மாவட்டம், கேரளாவிலும் மழை பெய்யும். ராமநாதபுரம், சிவகங்கை, டெல்டா பகுதியில் மதியம் மழை பெய்யும். திண்டுக்கல், மதுரை, கோவை, திருப்பூர், நீலகிரி, திருச்சி, டெல்டாவின் உள் பகுதியில் மழை பெய்யும்.

தென் மாவட்டங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்யும். தென் மாவட்ட கடலோரப் பகுதி உள் பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி தொடங்கி உள் பகுதியிலும் மழை பெய்யும். நாளை இது விலகி நிற்கும். இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நீடிக்கும். வங்கக் கடலில் உள்ள நிகழ்வு தமிழகத்தை நெருங்கி வரும் வாய்ப்புள்ளதால் டெல்டாவில் மழை பெய்யும். வட கடலோரப் பகுதியில் சிறிது தாமதமாக பெய்யும்.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED விஜய்யின் பதவியேற்பு விழாவில் 3ம்...