- ராமதாஸ்
- திண்டிவனம்
- பாலமகா
- அனைத்திந்திய புரட்சிகர தலைவர் மக்கள் முன்னேற்றக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திண்டிவனம்: கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக மற்றும் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போட்டியிட்டது. இதில் 2 கட்சிகளுக்கும் டெபாசிட் இழந்து மிகுந்த பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கவுரவத்தலைவர் ஜி.கே மணி, செயல்தலைவர் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணம் குறித்தும், இனி மேற்கொள்ள இருக்கும் கட்சியின் பணிகள் குறித்தும், ராமதாஸ் நிர்வாகிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சேலம் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இன்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் வேட்பாளர்கள் ராமதாசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
