×

பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்

 

சென்னை: பதவியேற்பு விழாவில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப் பெண் சிறப்பு படை அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டீர்கள். நான் ஒன்றும் தேவதூதன் அல்ல; சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். இத்தனைக் கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி வருகிறது. தமிழ்நாடு அரசின் தற்போதைய நிலவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லார்க்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன்.

மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழு கவனம் செலுத்துவேன். நான் மன்னர் குடும்பத்தில் இருந்து வரவில்லை; எனக்கும் வறுமை, பசி தெரியும். கோடிக்கணக்கான மக்கள் என்னுடன் இருக்கும் வரை என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். முகத்தை மூடிக் கொண்டு யாரையும் சென்று சந்திக்க மாட்டேன். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

ஜெயித்துவிட்டோம் என ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். தப்பு செய்ய மாட்டேன், தப்பு செய்ய விடவும் மாட்டேன். போதைப் பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பணத்தில் ஒரு பைசா தொட மாட்டேன். ஒரே அதிகாரம்தான்… பல அதிகார மையங்கள் இருக்காது. எல்லோருமாக இணைந்து புது ஆட்சியைத் தருவோம்

Tags : Principal ,Vijay ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Singh ,Singappen ,
× RELATED விஜய்யின் பதவியேற்பு விழாவில் 3ம்...