×

விலங்குகளைக் கண்காணிக்க விவசாயிகளுக்கு ‘டார்ச்லைட்’

*வனத்துறை வழங்கியதுதிருவில்லிபுத்தூர் : விளைநிலங்களில் சேதப்படுத்தும் விலங்குகளை கண்காணிக்க விவசாயிகளுக்கு டார்ச்லைட் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களில் அடிக்கடி உணவுக்காகவும் குடிநீருக்காகவும் வன விலங்குகள் உள்ளே புகுந்து விலை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.இதனைத் தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வன விலங்குகள் இரவு நேரத்தில் விவசாய நிலத்திற்குள் வருவதை கண்காணிக்க விவசாயிகளுக்கு ‘டார்ச்லைட்’ வழங்க வனத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 72 விவசாயிகளுக்கு `டார்ச்லைட்’ வழங்கப்பட்டது. டார்ச் லைட்டை வனத்துறை ஏசி எஃப் மணிவண்ணன் மற்றும் வன விரிவாக்க மைய அதிகாரி பால்பாண்டியன் ஆகியோர் வழங்கினார்….

The post விலங்குகளைக் கண்காணிக்க விவசாயிகளுக்கு ‘டார்ச்லைட்’ appeared first on Dinakaran.

Tags : Thiruvilliputhur ,Forest Department ,Virudhunagar district ,Western Ghats ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...