×

ட்ரெண்டாகும் #குதிரை_பேர_tvk.!! தவெக-வின் தூய சக்தி பிம்பத்திற்கு விழுந்த அடி

சென்னை: தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எந்த கூட்டணியை பார்த்து தீயசக்தி என்று வர்ணித்ததோ இன்று அதே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒவ்வொன்றிடமும் ஆதரவிற்காக தவெக கையேந்தி நிற்பதை நாடே பார்த்து கொண்டிருக்கிறது.

மாற்றம் வேண்டும் மற்றும் தீயசக்தி இந்த 2 வார்த்தையை வைத்து தேர்தலை எதிர்கொண்ட தவெக, தான் சந்தித்த முதல் தேர்தலில் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் திமுக-வை தீயசக்தி என்றும், தான் தூய சக்தி என்றும் தவெக தலைவர் விஜய் ஒரு மாயபிம்பத்தை கட்டமைத்தார்

தேர்தல் முடிவுகள் வந்து இன்றுடன் 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட, தமிழகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது தவெக. இந்த சூழலில் மூன்று முறை ஆளுநர் மாளிகை சென்றுவந்த பின்னும் தவெக-வை ஆளுநர் ஆட்சியமைக்க இதுவரை அழைக்கவில்லை. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காமல் தாமதம் செய்வது ஏன் என்று மாநில கட்சிகள் முதல் தேசியக்கட்சிகள் வரை பலரும் கேள்வி கேட்டு முடித்தாகிவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட தவெக-வோ வாய் மூடி நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது வழக்கம் போல். முக்கிய பிரச்சனைகளில் மவுனமாக இருப்பதை ஒரு யுத்தியாகவே வைத்திருக்கும் தவெக, தனக்கே நெருக்கடி வரும் போது கூட வாயை மூடி இருக்கிறது.

இந்த சூழலில் தான் தவெக கட்சியானது குதிரை பேர புகாரில் சிக்கி நெட்டிசன்களிடமும், பொது மக்களிடமும் சின்னாபின்னமாகி வருகிறது. அமமுக எம்.எல்.ஏ காமராஜ் பெயரில் போலி ஆதரவு கடிதத்தை தவெக, ஆளுநரிடம் கொடுத்ததாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனது கட்சி எம்.எல்.ஏ-விடம் தவெக சார்பில் குதிரை பேரம் நடத்தப்பட்டதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டினார்.

எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்ட தவெக கட்சி குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், இதற்காகப் பணம் மற்றும் பதவிகள் பேரம் பேசப்படுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்த புகாரை காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழலை ஒழிப்போம் என்று தேர்தலை சந்தித்த விஜய், எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்ற பதவி வெறியில் முறைகேடாக அமமுக எம்எல்ஏ காமராஜ் பெயரில் ஆதரவு கடித்தை கொடுத்து ஆளுநரையே திசை திருப்ப முயற்சித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக குதிரைபேரத்தில் தவெக தரப்பு ஈடுபட்டுள்ளதாக டிடிவி குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில் #குதிரை_பேர_tvk என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி, தவெக மற்றும் விஜய் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி வருகிறது.

Tags : Taweka ,Chennai ,Nade ,
× RELATED பாஜக என்ற வார்த்தையை சொல்ல பயம் எதற்கு...