ஜெயங்கொண்டம், மே 9: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது திரௌபதி அம்மனுக்கு பக்தர்கள் நேற்று தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள இடையகுறிச்சி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி முடிந்து கடந்த 18 நாட்களாக தினசரி இரவு பாரத கதை கூறும் நிகழ்ச்சியும் தினசரி சாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. நேற்று காலை திரௌபதி அம்மனுக்கு 16 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு மாலை சுமார் 5மணி அளவில் பெரிய தேரில் சுவாமி வீதி உலா புறப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிலில்
