- அகிலேஷ்
- காங்கிரஸ்
- திமுகா
- தவெகா
- லக்னோ
- டிஎம்சிஏ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அகிலேஷ் யாதவ்
- யு.
- சமாஜவாதி கூட்டணி
லக்னோ: தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில், தேசிய அளவில் அந்த கட்சியின் மீதான விமர்சனங்கள் கடுமையாக எழ தொடங்கியுள்ளது. காங்கிரஸ் மீது அகிலேஷ் யாதவ் கடும் விமர்சனத்தை மறைமுகமாக முன்வைத்துள்ளார்.
உ.பி.யில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மை மீது தற்போது அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்திலும், திமுக தமிழ்நாட்டிலும் ஆட்சியை இழந்துள்ளன.
இதனிடையே, நேற்று கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்ட அகிலேஷ் யாதவ், மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில், மமதா பானர்ஜி மற்றும் மு.க. ஸ்டாலினுடன் தான் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ள அகிலேஷ் யாதவ், ‘கடினமான நேரத்தில் ஒருவரைக் கைவிடுபவர்கள் நாங்கள் அல்ல” என்று பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு தமிழ்நாட்டில் தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்த காங்கிரஸை மறைமுகமாக விமர்சிப்பது போன்று அமைந்துள்ளதாக தெரிகிறது.
