×

அரியலூரில் மதிமுக 33ம் ஆண்டு தொடக்க விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அரியலூர்,மே 7: அரியலூரில் மதிமுக 33ம் ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. அரியலூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 33ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அக்கட்சி சார்பில் கொடி ஏற்றி நேற்று கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகம் முன், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ சின்னப்பா, கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலர் ராமநாதன் தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தங்கவேல், அரியலூர் நகர செயலர் மனோகரன், வடக்கு ஒன்றியச் செயலர் சங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அய்யாதுரை, மாவட்ட பிரதிநிதி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : MDMK 33rd year inaugural ceremony ,Ariyalur ,Marumalarchi ,Dravida ,Munnetra Kazhagam ,
× RELATED தென்தாமரைக்குளம் அருகே மகளுடன் இளம்பெண் மாயம்