×

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மத்தியபிரதேசத்திலிருந்து தமிழ்நாடு வழியாக மன்னார் வளைகுடா வழியாக நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, கோவை மலைப்பகுதிகளில் காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மே 7ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மே 8, 9ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Theni ,Dindigul ,Karur ,Trichy ,Namakkal ,Erode ,Nilgiris ,Madhya Pradesh ,Gulf of Mannar… ,
× RELATED தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்