×

காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

சென்னை: காங்கிரஸ் கட்சியைப் பற்றிப் பேச பாஜகவிற்கு எந்த அருகதையும் இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜோதிமணி தெரிவித்துள்ளதாவது; “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கூட்டணி கட்சிகளையும் அழித்துவிட்டு அவர்கள் இடத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதை பாஜக நினைவில் கொள்ளட்டும். அஸ்ஸாம்.கண பரிசத், SAD,PDP, JD (S),JD( U), Siva sena, HVM, அதிமுக உட்பட பாஜக அழித்தொழித்த கட்சிகளின் பட்டியல் வெகு நீளம்.

பாஜக தமிழ்நாட்டை அழிக்கத் துடிப்பதால் தான் அதைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையை நாங்கள் செய்ய வேண்டியுள்ளது. எங்களுக்கு எந்தக் கூட்டணிக் கட்சிகளையும் அழித்துப் பழக்கமில்லை” என தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Congress party ,Congress ,B. Astrology ,Chennai ,B. Astrologer ,Jotimani ,Kashmir ,Kanyakumari ,
× RELATED சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து!