சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அதிமுகவிடம் ஆதரவு கேட்டு தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை தொடர்பாக உரிய நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுகவுடன், தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’’ என்றார்.
