- எடப்பாடி பழனிசாமி
- ராயப்பேட்டை
- சென்னை
- எடப்பாடி பழனிசாமி
- ராயபெட்டா
- ஆதிமுக
- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்
சென்னை: தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை இழந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசு வீட்டை காலி செய்து ராயப்பேட்டையில் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால், கடந்த 5 ஆண்டுகளாக வகித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு முதல் பசுமை வழி சாலையில் உள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி’ யில் அமைச்சர், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே உள்ள நிலையில் அந்த அரசு இல்லத்தில் இருந்து காலி செய்துவிட்டு ராயப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் இருக்கக்கூடிய இடத்திற்கு அருகே புதிய வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார்.
தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர்களுக்குமான பனிப்போர் நிலவும் சூழலில் ஏராளமான தொண்டர்கள் தினசரி பழனிசாமியை பார்த்து செல்லும் நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது. அமைச்சர் அல்லாதவர்களுக்கு பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லங்களில் குடியிருக்க அனுமதியில்லாததால் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணி துறை சார்பில் முறையாக அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய வீட்டில் எடப்பாடி குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
