×

கொளுத்தும் கோடை வெயில் வீடுகளுக்குள் தஞ்சமடையும் பாம்புகள்: பொதுமக்கள் பீதி

 

ஈரோடு: ஈரோடு மாநகரில் வெயில் காரணமாக வீடுகளுக்குள் தஞ்சம் அடையும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். நள்ளிரவு வரை வெப்பத்தின் தாக்கம் தொடர்கிறது. வெயிலால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. வெயில் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான இடம் தேடி செல்கின்றன. வீடுகளில் போடப்பட்டுள்ள மொசைக், டைல்ஸ், கிரானைட் போன்றவற்றால் பாம்புகள் எளிதில் வீடுகளில் தஞ்சம் அடைந்து சுருண்டு கொள்கின்றன.

நேற்று முன்தினம் காலை ஈரோடு சத்தி ரோடு கொங்கு நகரில் சவுந்தரராஜன் என்பவர் வீட்டில் 3 அடி நாக பாம்பு இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பாம்பை பிடித்தனர். இதேபோன்று, ஈரோடு பெரிய சேமூர் கொத்துக்காரர் காட்டை சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் வீட்டில் இருந்து 4 அடி நீள நாக பாம்பை ஈரோடு தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் பிடித்தனர். பின்னர், இரு பாம்புகளும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

Tags : Erode ,
× RELATED கரூரில் லஞ்சம் பெற்ற போக்குவரத்து அலுவலர் கைது