×

கடுமையான போட்டிக்கு இடையே துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு 11,750 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: துறைமுகம் தொகுதியில் கடுமையான போட்டிக்கு இடையே திமுக வேட்பாளரான அமைச்சர் சேகர்பாபு 11,750 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. விஐபி தொகுதியான சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, தவெக சார்பில் சினோரா அசோக், நாதக சார்பில் இரப்பாசன் சேரிப் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போது, தவெக கட்சி வேட்வாளர் முன்னிலை பெற்றார். அதன் பிறகு காலை 8.30 மணிக்கு வாக்கு பதிவு இயந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், அமைச்சர் சேகர்பாபு முதல் சுற்றில் 1,817 வாக்குகள், 2ம் சுற்றில் 2,022 வாக்குகள், 3ம் சுற்றில் 3,199 வாக்குகள் என மொத்தம் 7,038 வாக்குகள் பெற்று தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை விட 133 வாக்குகள் பின் தங்கினார்.

தொடர்ந்து 4வது சுற்றில் அமைச்சர் சேகர்பாபு தவெக வேட்பாளரை விட 599 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். அதன் பிறகு அடுத்தடுத்த சுற்றுகளில் அமைச்சர் சேகர்பாபு, தவெக வேட்பாளரை காட்டிலும் அதிகம் பெற்றார். அந்த வகையில் 14வது சுற்றில் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கை விட 11,750 வாக்குகள் அதிகம் பெற்று அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 17,256 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,607 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தனர். இறுதி வரைக்கும் கடுமையான போட்டிக்கு இடையே அமைச்சர் சேகர்பாபு துறைமுகம் தொகுதியில் தனது வெற்றி கனியை பெற்றார்.

Tags : Minister ,Sekarbabu ,Port constituency ,Chennai ,DMK ,Tamil Nadu Assembly elections ,DMK… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து