- டிமுகா ஏஜென்ட்
- வாக்கு எண்ணும் மையம்
- சென்னை
- வி.ஜி.ராஜேந்திரன்
- அரசு பாலிடெக்னிக் கல்லூரி
- திருவள்ளூர்
- திமுகா
- வி.ஜி. பத்ராய்புச்சுத்தூர்
- வாக்கு எண்ணிக்கை
- ராஜேந்திரன்
சென்னை: திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன். அந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை திருவள்ளூர் அடுத்த செவ்வாய் பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு வாக்கு எண்ணிக்கை மைய முகவராக பட்டரைபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இவர் பூண்டி ஒன்றிய அவைத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து, காலை 8 மணி அளவில் ெதாடங்கிய தபால் வாக்கு எண்ணும் இடத்தில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாஸ்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
