×

நிதி நெருக்கடி இருந்தாலும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மூலதன செலவை அரசு தொடரும்

புதுடெல்லி: நிதிச்சுமை இருந்தபோதிலும் நடப்பு நிதியாண்டில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மூலதன செலவை மேற்கொள்வதில் அரசு உறுதியாக உள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் செலவினத் துறை செயலாளர் உவால்னம் கூறுகையில், ‘‘நிதி நெருக்கடி என்பது உண்மையில் ஒரு ஏதார்த்தமான நிலையே ஆகும். ஆனால் அதே நேரத்தில் முன்னுரிமை துறைகளுக்கான மூலதன செலவு முக்கிய அம்சமாக தொடரும். இதனை பாதுகாத்து பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அளவிலேயே தொடர்ந்து நடைபெறுவதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். 2027ம் ஆண்டுக்கான மூலதன செலவில் நெடுஞ்சாலைகள், ரயில்வே, கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைகள் ஆகியவை முக்கிய கவனப்பகுதிகளாக இருக்கும். தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மையில் இந்தியாவுக்கு மிகவும் சவாலான சூழலை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு சூழலையும் மிகுந்த துரிதத்துடனும், செயல்திறனுடனும் கையாள்வதில் அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது” என்றார்.

Tags : NEW DELHI ,Uvalnam ,Secretary of State for Expenditure of the Union ,
× RELATED மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழர்கள் 6 பேர் பலி