×

மகாராஷ்டிரா படகு விபத்தில் தமிழர்கள் 6 பேர் பலி

ஜபல்பூர்: மகாராஷ்டிரா படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் 6 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். திருச்சியை சேர்ந்த காமராஜ், அவரது உறவினர்கள் 6 பேர் படகு விபத்தில் உயிரிழந்தனர். காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சென்றுவிட்டு ஜபல்பூர் சென்ற போது நீரில் மூழ்கி பலியாகினர்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. நர்மதை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் நேற்று மாலை, 29 சுற்றுலா பயணிகள் ஒரு சொகுசு படகு சவாரியில் ஈடுபட்டனர். அணையின் நடுப்பகுதியில் படகு சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்தனர்.

தகவலறிந்து போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட பல்வேறு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். அவர்கள் வருவதற்குள் 9 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் மீட்பு குழுவினர் உள்ளூர்வாசிகள் உதவியுடன் 15 பேரை மீட்டனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 5 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் மோகன் யாதவ், கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும் மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டார். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பலத்த காற்று காரணமாக நீர் கொந்தளிப்பாக மாறியதால் படகு கவிழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Tags : Tamils ,Maharashtra ,Jabalpur ,Tamil Nadu ,Kamaraj ,Trichy ,Kashi.… ,
× RELATED மக்களின் நலனை எண்ணாமல், LPG விலையை...