×

மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும்; “மே தின தொடர்விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்க்கொள்ள வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்கள் மூலமாக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் விபரம் வருமாறு, 30.04.26 முதல் 01.05.26 அதிகாலை 03.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,13,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இச்சிறப்புப் பேருந்து இயக்கம் இன்று 01.05.25 பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Tags : May Day holiday ,Chitra Pournami ,Chennai ,Government of Tamil Nadu Express Transport Corporation ,Chitra Purnami ,
× RELATED மெட்ரோ ரயில் பயணிகளுக்காக இன்று முதல்...