×

95 பேருக்கு ஹீட் ஸ்ட்ரோக்; மகாராஷ்டிராவில் 4 லட்சம் பேர் பாதிப்பு

 

மும்பை: மகாராஷ்டிராவில் வெப்ப தாக்குதலால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகராஷ்டிரா மாநிலம் முழுவதும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், வெப்பத்தாக்க பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 29 வரை 95 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதே காலகட்டத்தில், வெப்பம் தாக்குதல் தொடர்பான அறிகுறிகளுடன் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இந்த கால கட்டத்தில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மாநில தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராஜு சுலே கூறுகையில்,‘இதுவரை 95 வெப்பத்தாக்க பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் உறுதிசெய்யப்பட்ட உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இந்த ஆண்டு, பல மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பலமுறை 40 டிகிரி செல்சியஸ் தாண்டியுள்ளது என்றார். நந்தூர்பாரில் அதிகபட்சமாக 14 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாசிக்கில் 7 பேரும், கட்சிரோலியில் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : Maharashtra ,MUMBAI ,
× RELATED நீட் தேர்வு நடைபெறும் மையங்களில்...