×

ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

திருச்சி. ஏப்.30: ஸ்ரீரங்கம் பகுதியில் வீட்டின் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை ஜே.ஜே நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்(21). இந்நிலையில் கடந்த ஏப்.27ம் தேதி இரவு இவரது வீட்டனருகே 3 நபர்கள் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அதனை குணசேகரன் தட்டிக் கேட்டவுடன், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் ஏப்.28ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில், அந்த 3 நபர்களும் குணசேகரன் வீட்டின் அருகே வந்து அவரை திட்டி வீட்டின் நுழைவாயிலுக்கு அருகே 2 மது பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பி தீவைத்து வீட்டின் வாசலில் வீசினர். இதில் சுவரில் தீ பற்றியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஸ்ரீரங்கம் ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்த பாலபிரியன் (18), மணிகண்டன் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (20) மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Srirangam Trichy ,Srirangam ,Trichy ,Srirangam Panchakarai Road ,J. Gunasekaran ,J. ,
× RELATED கஞ்சா விற்ற மூதாட்டி கைது