×

திருச்சியில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

திருச்சி, ஏப்.29: திருச்சியில் வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (18). இவர் ஏப்.26ம் தேதி காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார். அப்போது தாராநல்லூர் தண்ணீர் தொட்டி அருகே உட்கார்ந்திருந்தபோது, அங்கு வந்த 4 வாலிபர்கள் சஞ்சையிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சஞ்சையை தாக்கினர். இதில் காயமடைந்த சஞ்சை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து தாராநல்லூர் கல்மந்தை காலனியைச் சேர்ந்த வீரராஜா(29), அலங்கன்ராஜ் (25), தினேஷ்(24), சுரேஷ்குமார் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

 

Tags : Trichy ,Sanjay ,Paramakudi ,Ramanathapuram district ,Gandhi Market ,Taranallur ,
× RELATED ஸ்ரீரங்கத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது