×

ஓசூரில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ஓசூர், ஏப்.30: ஓசூரில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, ஓசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திமுக மாநகராட்சி சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், கவிஞர்கள் முருககுமரன், பாலாஜி, முத்துசாமி, எழுத்தாளர் கமலாலயன் உள்பட பலர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். தமிழியக்கம் மாவட்ட செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி தெரிவித்தார்.

Tags : Bharathidasan ,Hosur ,Father Periyar Square ,Hosur Inner Ring Road ,Parkutharivalar Kazhagam ,District ,President ,Sivanthi Arunachalam ,
× RELATED சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்