×

கல்லூரி மாணவி உள்பட 2 இளம்பெண்கள் மாயம்

கிருஷ்ணகிரி, ஏப்.30: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கொத்தகோட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். இதே போல், கெலமங்கலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி வரலட்சுமி(21). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற வரலட்சுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி குப்புராஜ் கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வரலட்சுமியை தேடி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Vaniyambadi Kothakottai ,Tirupattur district ,Government Women's Arts College ,Bargur, Krishnagiri district ,
× RELATED சிறுமியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்