×

வாலிபர் தற்கொலை

சிவகாசி, ஏப். 29: சிவகாசி அருகே எஸ்.என்.புரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தகுமார் (32). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 24ம் தேதி இரவு தண்ணீர் பாட்டிலில் வாங்கி வந்த பெட்ரோலை தனக்கு தானே ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sivakasi ,Balakrishnan ,Anandakumar ,S.N. Puram ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது