×

டாஸ்மாக் மூடல்

விருதுநகர், ஏப்.29: விருதுநகர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 அன்று டாஸ்மார்க் உள்பட அனைத்து தனியார் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் தினம் மே 1 அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகள் மற்றும் எஃப் எல் 1, எஃப் எல் 2, எப்எல் 3 முதலான அனைத்து மதுபான கடைகளிலும் மூடப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : TASMAC ,Virudhunagar ,Collector ,Sugaputra ,Virudhunagar district ,Labor Day ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது