×

பாகிஸ்தானில் பயங்கரம் லஷ்கர் இ தொய்பாவின் தளபதி யூசுப் அப்ரிடி சுட்டு கொலை

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வாவில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தளபதியும் ஹபீஸ் சையத்தின் நெருங்கிய கூட்டாளியுமான யூசுப் அப்ரிடி சுட்டு கொல்லப்பட்டார். மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்பவர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சையது. லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

ஹபீஸ் சையதின் ஜமத் உத் தாவா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கிய நிர்வாகி ஷேக் யூசுப் அப்ரிடி. கைபர் பக்துன்வா மாகாணத்தில் தீவிரவாத செயல்களுக்கான ஆட்களை சேர்ப்பது, நிதி திரட்டுவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கவனித்து வந்த யூசுப் அப்ரிடி கைபர் மாகாணத்தில் உள்ள லண்டி கோட்டால் என்ற இடத்தில் வந்து நேற்று முன்தினம் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

Tags : Pakistan ,Yusuf Afridi ,Lashkar e Taiba ,LAHORE ,YUSUB APRIDI ,HABEES SYAD ,KAIBER ,BAHTUNWA ,Habeez Syed ,Mumbai ,Lashkar e ,Toyba ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...