×

சென்னை பாரிமுனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை பாரிமுனையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டைகளை பதுக்கியது தொடர்பாக ஆனந்தன் அந்தோணி, செங்கிஸ்கான், முகமது அசார் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள், ஜீப் ஆகியவை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்படைக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் அப்துல் ரகுமானை போலீசாரும் வனத்துறையினரும் தேடி வருகின்றனர்.

Tags : Kudon ,Chennai border ,CHENNAI ,BARRIMUNA ,Anandan Anthony ,Chengkiskan ,Mohammad Azar ,Semmarakkatas ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை