×

பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டு தீயை ஹெலிகாப்டர் கொண்டு அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத வெயில் அடித்து வருகிறது. இதனால், அனைத்து வனங்களும் காய்ந்த நிலையில், தற்போது ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு மரங்கள் நாசமாகி வருகிறது. முதுமலை புலிகள் காப்பத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன் காட்டு தீ ஏற்பட்டு பல ஏக்கர் பரப்பளவிலான வனங்கள் எரிந்து சேதமாகின. அதேபோல், ஊட்டி அருகே பார்சன்ஸ்வேலி பகுதியில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக காட்டு தீ ஏற்பட்டு வனங்கள் அழிந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும், இப்பகுதியில் காற்று வீசுவதால் தொடர்ந்து காட்டு தீ அருகில் உள்ள வனங்களில் பரவி எரிந்து வருகிறது. பல நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த காட்டு தீ ஏற்பட்டுள்ளதால், அதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், இந்த காட்டு தீயை அணைக்க நேற்று கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு காட்டு தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே அரசு மற்றும் தனியார் நிலங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.

Tags : Parsons Valley ,Ooty ,Nilgiris district ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...