×

மே.வங்கத்தில் பாஜக-விற்கான பேராதரவை கண்டு திரிணாமுல் காங்., நிலைகுலைந்துள்ளது – பிரதமர் மோடி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்துள்ள முதற்கட்ட தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியுள்ளதை கண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார். மேற்கு வங்​க மாநிலத்தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதில் முதல் கட்​ட​மாக 152 தொகு​தி​களுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்​தல் நடத்​தப்​பட்​டது. இதில் இதுவரை இல்லாத வகையில் 92.72 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இரண்​டாம் கட்ட தேர்​தல் வரும் 29-ம் தேதி நடை​பெற உள்​ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார். அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, மேற்குவங்கத்தில் இதுவரை இல்லாத அளவு வாக்குபதிவு வீதத்தை மக்கள் சாத்தியமாக்கி உள்ளனர். இதன் மூலம் மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியுள்ளது மற்றும் பாஜக-விற்கு பேராதரவு கிடைத்துள்ளது. இதை கண்டு மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டுள்ளது என்று கூறி உள்ளார்.

இரண்டாம் கட்ட தேர்தலிலும் இதே போல வாக்கு சதவீதம் அதிகரிக்கும், இதன் பிறகு மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கை​யின் போது திரிண​முல் காங்​கிரஸ் கட்சியின் காட்​டாட்​சிக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். மேற்குவங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஜனநாயக கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டனர். மேற்குவங்க மக்களின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக அரசு அமைந்தவுடன் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு அநீதிக்கும் பாடம் கற்று தரப்படும் என குறிப்பிட்டார். மாநிலத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதி​ரான குற்ற வழக்​கு​கள் அனைத்​தும் மீண்​டும் விசா​ரிக்​கப்​படும். தவறு இழைத்​தவர்​கள் தப்​பிக்க முடி​யாது. அவர்​கள் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படு​வார்​கள் என்றும் பிரதமர் பேசி இருக்கிறார்.

மாநிலத்தை “சிண்டிகேட்ஸ்” வாயிலாகவே மம்தாவின் கட்சி நிர்வகித்து வருவதாக மோடி குற்றம் சாட்டியதுடன், அக்கட்சியை ஒரு “கொடுமையான மற்றும் ஊழல் மிகுந்த” சக்தியாகவும் வர்ணித்தார். தொடர்ந்து பேசிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் சட்டவிரோதச் செயல்களை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, வங்கதேச ஊடுருவலை அக்கட்சி ஊக்குவிப்பதாகவும், இது மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பை மாற்றி கலவரங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

 

Tags : TRINAMUL KANG ,BJP ,BANGLADESH ,PM ,MODI ,Kolkata ,Trinamool Congress Party ,West ,West Bengal ,
× RELATED பச்சை முட்டையிலிருந்து...