×

தேர்தல் பணியில் ஈடுபட்ட பெண் காவலரிடம் தகராறு: ரவுடி கைது

பெரம்பூர்: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (31), கொண்டிதோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். புளியந்தோப்பு காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் புளியந்தோப்பு குட்டிதம்புரான் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனக்குமார் என்பவர் மதுபோதையில் பெண் காவலர் ஜெயலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அங்கு வந்த காவலர் காமேஷ் என்பவரை அடிக்கப் பயந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தடுத்து அவரை அனுப்பி வைத்தனர். இது குறித்து பெண் காவலர் ஜெயலட்சுமி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் நேற்று பேசின் பாலம் காந்திநகர் பகுதியை சேர்ந்த தனக்குமார் (37) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் குட்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Rawudi ,PERAMPUR ,JAYALAKSHMI ,NAMAKKAL DISTRICT ,CHANDIDOPU AREA ,Pulianthopu ,Mundinam Pulianthopu ,Vakuchawadi ,Gutitamburan Street ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை