×

கொங்கு மண்டலத்தில் வாக்கு சதவீதம் அதிகம்

சென்னை: 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்தது தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 85.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிகபட்சமாக வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகமாக கரூரில் 92.63% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், சேலத்தில் 90.76%, நாமக்கலில் 90.21%, ஈரோடு 90.10% என 90 சதவீதத்திற்கு மேல் பதிவான அனைத்து மாவட்டங்களும் மேற்கு மண்டலமான கொங்கு பகுதியிலேயே உள்ளன.
தமிழ்நாட்டிலேயே குறைவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61% ஆக பதிவாகியுள்ளது; அதேபோல், ராமநாதபுரத்தில் 77.01%, நெல்லை 77.94%, தூத்துக்குடி 80.53%, தென்காசி 82.41% ஆகவும் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளது. சிவகங்கை 76.66%, மதுரை 80.52%, தேனி 81.55%, விருதுநகர் 84.82% என தென்மாவட்டங்களில் எங்கேயுமே 85% வாக்குப்பதிவை தொடவில்லை.

Tags : Kongu ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Tamil Nadu ,Election Commission ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து