×

3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் விடிய விடிய கொண்டு செல்லப்பட்டது: சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு

 

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளின் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் 4 வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய கொண்டு செல்லப்பட்டு அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து அறை மூடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட அறைக்கு சிசிடிவி பதிவுகளுடன் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினருடன் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்தது. வாக்கு பதிவு ேநற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தை தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து தமிழகம் முழுவதும் உள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு விடிய விடிய கொண்டு வந்து அரசியல் கட்சிகள் முகவர்கள் முன்னிலையில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சென்னையை பொருத்தவரை 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணாப்பல்கலைக்கழகத்திற்கு லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இந்த பணி நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 ெதாகுதிகளில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், கொளத்தூர், வில்லிவாக்கம், பெரம்பூர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை லயோலா கல்லூரியிலும், தி.நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கிண்டியில் உள்ள அண்ணாப்பல்கலைக்கழக மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணும் மையங்களில் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் உள்ளேயும், வெளியேயும் அதி நவீன சிசிடிவி மேராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீல் வைக்கப்பட்ட அறையை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கிகளுடன் துணை ராணுவ படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் மற்றும் போலீசார் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தனித்தனியாக சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட அறையின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பகுதிகள் அனைத்து காட்சிகளும் சிசிடிவி காட்சிகள் மூலம் அனைத்து அரசியல் கட்சி முகவர்கள் பார்க்கும் வகையில் மானிட்டர் மூலம் ஒளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ளவர்கள் 8 மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அடையாள அட்டையுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை ஓட்டு எண்ணும் நாளான மே 4ம் தேதி வரை இந்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் 3 வாக்கு எண்ணும் மையங்கள் அருகே தலா 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் தலைமையில் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : Electronic Voting Machines ,Chennai ,
× RELATED செல்வப்பெருந்தகை வெளியிட்டார் வருமான...