×

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் ராகவ் சதா!

டெல்லி: ராகவ் சதா ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். ராகவ் சதா தலைமையில், சந்தீப் பதக் அசோக் மிட்டல், ஹர்பஜன் சிங், விக்ரம் சாஹ்னி, சுவாதி மலிவால் உள்ளிட்ட முக்கிய ராஜ்யசபா உறுப்பினர்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகியுள்ளனர். 7 பேரும் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய ராகவ் சதா; “நாங்கள் பாஜகவுடன் இணைகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, முன்பு பல தலைவர்கள் எடுக்க அஞ்சிய பல முடிவுகளை எடுத்துள்ளது.

இந்த தலைமைக்கு மக்கள் ஒருமுறை அல்ல, மும்முறை ஒப்புதல் அளித்துள்ளனர். பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் நாட்டிற்காக பணியாற்றுவோம். 15 ஆண்டுகளாக என் ரத்தத்தால் நான் வளர்த்தெடுத்த ஆம் ஆத்மி கட்சி, தன் பாதையை இழந்துவிட்டது. நான் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி, மீண்டும் மக்களிடம் திரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி-க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று மாநிலங்களவை எம்.பி. ராகவ் சதா கூறியுள்ளார். இதனால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை துணை தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Raghav Chadha ,Aadmi Party ,BJP ,Delhi ,Raghav Sada ,Aam Atmi Party ,Rajya Sabha ,Sandeep Pathak ,Ashok Mittal ,Harbhajan Singh ,Vikram Sahni ,Swati Maliwal ,Yes Atmi ,
× RELATED மோசமான வானிலை காரணமாக சபரிமலைக்கு...