சென்னை: சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
அதாவது கடந்த 21ம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.14,300க்கும் சவரன் ரூ.1,14,400க்கும் விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.275க்கு விற்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,250க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.275க்கும் விற்பனையானது. நேற்றைய (ஏப்.23) நிலவரப்படி ஒரு கிராம் ரூ.14,160க்கும், ஒரு சவரன் ரூ.1,13,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.
