×

வருமானவரி துறை சோதனை விவகாரம்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் மணிமங்கலம் பகுதிவாக்குச்சாவடி மையத்தில் காங்கிரஸ் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளருமான செல்வப்பெருந்தகை, தனது மனைவி, மகளுடன் வாக்கு செலுத்தினார்.  தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். வருமான வரித்துறை சோதனை தொடர்பாக நாளை (இன்று) பத்திரிகையாளர்கள் மத்தியில் வீடியோ, போட்டோ ஆதாரங்களை வெளியிடுகிறேன்.

வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை குறித்து தேர்தல் நேரத்தில் நான் கருத்து தெரிவித்தால் அரசியல் ஆதாயத்திற்காக பேசுவதாக கூறுவார்கள். இது தொடர்பாக சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளோம். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் யார் அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள், யார் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரியவரும். தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும், அதுதான் ஜனநாயகம்.

Tags : Income Tax Department ,Selvapperundhagai ,Chennai ,Congress ,Sriperumbudur ,Manimangalam ,Income Tax Department… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து