×

இந்திய அளவில் வைரலான வெள்ளிமலை மொத்த வாக்காளர் 5 பேர் வாக்களித்தவர்கள் 4 பேர்

வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளிமலை எஸ்டேட் மலைக்கிராமம் அமைந்துள்ளது. எஸ்ஐஆர் பணிக்கு பின் இந்த எஸ்டேட்டில் செந்தில், ஜெயராணி, பவுல், சுதா, ரோகித் ஆகிய பேருக்கு மட்டுமே ஓட்டுரிமை கிடைத்தது. இந்த எஸ்டேட், அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் அங்கு வாகனங்களில் செல்ல முடியாது. இருப்பினும் ஒரு வாக்கு கூட வீணாகக் கூடாது என்ற நோக்கத்தில் வெள்ளிமலையில் 5 வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடியை அமைத்தது. இதனையடுத்து இந்த வெள்ளிமலை வாக்குச்சாவடி இந்திய அளவில் வைரலானது.

நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு ஒரு மண்டல அலுவலர் ஒரு துணை மண்டல அலுவலர், 3 வாக்குப்பதிவு அலுவலர்கள், 3 போலீசார், ஒரு உதவியாளர் என மொத்தம் 9 பேர் கொண்ட குழுவினர் குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை குதிரை மூலம் எடுத்து கொண்டு ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், பவுல், சுதா, செந்தில், ஜெயராணி ஆகிய 4 பேர் மட்டுமே வாக்களித்தனர். ஒருவர் ஊரில் இல்லாததால் வாக்களிக்கவில்லை.

Tags : Vellimalai ,India ,Varusanadu ,Theni district ,Vellimalai Estate ,SIR ,Senthil ,Jayarani ,Paul ,Sudha ,Rohit ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து