×

எடப்பாடி பிரசாரத்தால் எனக்கு வாக்கு உயர்வு: செங்கோட்டையன் கெத்து

கோபி: கோபி அருகே குள்ளம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளரும் கோபி தொகுதி வேட்பாளருமான செங்கோட்டையன் காலை 7 மணிக்கு முதல் நபராக வந்து வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மும்முனை போட்டி என்றாலும் மக்கள் ஒரு முகமாக இருக்கிறார்கள். 27 கட்சி கூட்டணியாக வந்து ஒருவரை எதிர்க்கின்றனர். பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தேர்தலை சந்திக்கின்றனர்.

இது வேடிக்கையாக இருக்கிறது. கோபி தொகுதியில் இரண்டு முறை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்திருக்கின்றார். அவர் வந்து என்னை பற்றி பேசியது கூடுதலாக வாக்குகளை நான் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது’’ என்றார். கோபிசெட்டிபாளையத்துக்கு விஜய் வராதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ‘‘ஏற்கனவே மிகப்பெரும் மாநாட்டை ஈரோட்டில் நான் நடத்தி இருக்கின்றேன். அதுவே மிகப் பெரும் பிரசாரமாக இருந்தது’’ என்றார்.

Tags : Sengkottayaan Ketu ,Kobi ,Sengkottian ,Dweka ,Gobi ,Ghullampalayam Government High School ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து