- திமுக
- வைகோ
- திருவேங்கடம்
- மதிமுக
- பொதுச்செயலர்
- ரேணுகாதேவி
- திருச்சி எம்.பி.
- முதன்மை செயலாளர்
- துரை வைகோ
- அரசு மேல்நிலைப்பள்ளி
- கலிங்கப்பட்டி கிராமம்
- தென்காசி
திருவேங்கடம்: தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி மற்றும் வைகோவின் மகனும் திருச்சி எம்பியுமான மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் வைகோ கூறுகையில், திமுக தனது சொந்த பலத்திலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை நான் கடந்த ஒரு மாதமாக பிரசாரம் மூலமாக சொல்லி வருகிறேன். அதே கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.
திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என நான் நம்புகிறேன். ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு என தெரியவரும் என்றார். துரை வைகோ கூறுகையில், திமுக கூட்டணி கட்சிகள் 200 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும். மதிமுக 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.
